புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2019

ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை நீடிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, ஆகஸ்ட் 28-ம் தேதி (புதன்கிழமை) வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது, பசிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என தெரிவித்தார். விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நாளை வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையும் தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர்.