புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2019

குண்டுதாரியின் உடலை அகற்ற தீர்மானம்

மட்டக்களப்பு - கள்ளியங்காடு மயானத்தில், புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு - கள்ளியங்காடு மயானத்தில், புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது மாநகர முதல்வரின் தலைமையுரையுடன் விசேட அமர்வு ஆரம்பமானது.

குறித்த குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர், குறித்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூலம் முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப் பெற்று குறித்த எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை உள்ளிட்ட எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்களில் பலர், குறித்த தற்கொலைதாரியின் எச்சங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததுடன் ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதியின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் அதனை தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் இதன்போது தீர்மானத்தினை தெரிவித்தார்