புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2020

வடக்கில் மாணவர்களும் மாணவிகளும்  அபார சாதனை 
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.

மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கா
கோப்பாயில் இருந்து வெளியேற்றம் - புதிய தங்குமிடம் தேடும் இராணுவம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில்   உள்ளார்,  மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம்   ஒத்திகை,  உயிருடன் இருப்பதாக  தெ ன்கொரியா தகவல்,   ஒரே குழப்பம்  எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார் 

முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
பெற்றோர்களே ஆசிரியர்களே  தயவு செய்து பரீட்சை முடிவையிட்டு  மாணவர்களை  கண்டிக்கவோ  ஏளனம் செய்யவோ வேண்டாம் .தோல்வி வெற்றிகளின் படிக்கற்கள் தானே 

அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்

கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இன்று  அடையாள அடடை  இலக்கத்தில் கடைசி இலக்கமாக     3 அல்லது 4  உள்ளவர்கள்  வெளியே  செல்லலாம் 
கொழும்பு றோயல் கல்லூரியில்  புங்குடுதீவு  மாணவன்  9  ஏ  பெற்று சாதனை 
றோயல்  கல்லூரியில் க, பொ,  சா, தர   பரீடசையில்     புங்குடுதீவை   சேர்ந்த பவித்ரன் சர்மா  ஆங்கில மொழிமூலம்  தொற்றி  9 A   பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார்  

27 ஏப்., 2020

ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது

யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார்

கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு

முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள
யாழ் இ<ளம்பெண்   தூக்கில் தொங்கினார்  ?
யாழ் கடற்கரை வீதி  வாழ்  31 வயது  இளம்பெண் சனிக்கிழமை இரவு  தூக்கில்  தொங்கிய நிலையில்  இறந்து கிடந்தார்  ஒரு பிள்ளைக்கு தாயான  பிரதீபா  டில்ஷான் என்ற இளம்பெண்ணே  இறந்து  கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம்  கொண்டு  கணவன் விசாரணைக்கு  உள் படுத்தப்படுள்ளார் 

26 ஏப்., 2020

சுவிஸ்  மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய  வர்த்தக நிறுவனகளும்  கொரோனா விதிகளின்படி  விற்க முடியாத  பொருட்களினை   விற்ற   குற்றத்துக்காக  வழக்கினை சந்தித்துள்ளன 
சுவிஸில் போலீசாரை  தாக்கிய  13 17  வயது லெபனான்  நாடடவர் 
சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா  விதிமுறைகளை மீறி  குழுவாகா கூடி  நின்றதை கண்டித்த போலீசாரை  இந்த இருவரும் தாக்கி உள்ளனர் இருவரையும் அடையாளம்  கண்டுள்ளனர் 
சுவிட்சர்லாந்தில்  இன்றைய  தொற்றுக்கள் இதுவரை  48 .சுவிஸ்  முறைப்படி  தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள்  கொண்டுவந்துவிடடதா  என கருதலாமா அல்லது  இன்னுமொரு  கொரோனா அலை    வீசுமா .  சுவிஸின்  திடடமிடட  கால எல்லை   ஊரடங்கில் நாளை  மீள் நீடிப்பு  மே 11 வரை  உள்ளது நாளை  அறிவித்தபடி  சில  வர்த்தக  நிறுவனங்கள்  திறக்க  அனுமதி கொடுக்கப்படள்ளது 
ஐரோப்பிய  நாடுகளுக்கிடையிலான   எல்லைகளை  எப்போது  திறக்கலாம்  என்பது பற்றி  ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள்  வீடியோ கொன்பாரன்ஸ்  மூலம்  பேசவுள்ளன இதனை  சுவிஸ் நாடு  ஒழுங்கு பண்ணி உள்ளது   இந்தியாவில் இருந்தும்  91சுவிஸ்  பிரசைக்ள மற்றும்  122இங்கே  வாழ்கின்றவர்கள் என     விமானம் மூலம்  அழைத்து வரப்படுள்ளனர் 
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் சிப்பாய் மரணம்
வணக்கம் அன்பு உறவுகளே 
 ஒரு சிறிய  தகவல் மடல் 
----------------------------------------
எனது முகநூலில்  இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள்  என்னால்  நடத்தப்படும் பல இணையங்களில்  தரவேற்றம்  செய்யப்படுபவை தான்  .அவை  உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் .  தமிழை  எழுத்து பிழையின்றியி  சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில்  வெறி  பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை  உடனுக்குடன்   எவ்வளவு  வேகமாக  உங்களை  வந்து  செய்திகளை தகவல்கள்  வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால்  நிறைய  எழுத்துப்பிழைகளை  வசன  அமைப்பு   தவறுகள்  இடம்பெறுவது எனக்கும்   நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக  நான்  இணையதத்துக்கு பாவிக்கும்  பிளாக்கர்  நுட்பம்    தானாகவே விடுகின்ற தவறுகள்  தான் அவை  .  நீங்களும்  அன்டலா   சிறிய தவறுகளை   ஊகித்து விளங்கி கொண்டு  கடந்து போவீர்கள் என  நம்புகிறேன்    வடிவமைப்பு   இப்போதைக்கு  பார்க்க   வேண்டாம் வேகம் உண்மை  தான்  வேண்டும்  . கொரோன  செய்திகள்  கூடுதலானவை  அரசுகள்  உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே  கொண்டிருக்கும்  சுவிஸ்  செய்திகள் நூற்றுக்கு  நூறு   அரச திணைக்கள  தகவல்களை   அடிப்டையாகவே  வைத்து  வழங்குகிறேன்   நன்றி  என்னோடு இணைந்திருங்கள் உங்கள்  அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி  ஆதரவு  வசனங்கள் விமர்சனங்களில்   நாகரீகமான  நல்ல  தமிழை  பயன்படுத்துங்கள் தனிப்படட  ரீதியில்  யாரையும்  தக்க  வேண்டாம் .முக்கியமாக  தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை  நான்  நேரடியாக தணிக்கை செய்வேன்  மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை  ஈவிரக்கமின்றி  எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி 

ad

ad