புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2020

வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்காக வடமாகாணத்தில் 50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளை இராணுவம் கேட்டிருப்பதாக மாகாண கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்ணின் கீழ் உள்ள படைமுகாம்களில் இருந்து விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காகவெனத் தெரிவித்தே குறித்த பாடசாலைகள் இவ்வாறு படையினரால் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு படையினரால் கோரப்பட்ட பாடசாலைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 06 பாடசாலைகளும் , மன்னார் கல்வி வலயத்தில் 04 பாடசாலைகளும் , வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளும் , கிளிநொச்சி 03 , மடு 01 , வவுனியா வடக்கு 02 , சாவகச்சேரி 03 பாடசாலைகளும் கோரப்பட்டுள்ளது.இதேபோன்று வடமராட்சியில் 10 பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதோடு தீவகம், வலிகாமம் கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் செறிந்து வாழும் கோப்பாய் கல்வியற் கல்லூரியை இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்கான நிலையமாக தெரிவு செய்ததுடன் அதற்காண பணிகளில் இராணுவம் ஈடுபட்ட நிலையில் மக்களின் பலமான எதிர்ப்பபையடுத்து இராவம் அங்கிருந்து வெளியேறியிருப்பதம் குறிப்பிடத்தக்கது

ad

ad