27 ஏப்., 2020

ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது

யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை சதுர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த பூஜை வழிபாடுகளில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து சென்று பூஜை வழிபாடுகளில் பங்கேற்றிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர், பொலிசார் அவர்களை பிணையில் விடுத்துள்ளனர்