புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2020

கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படும் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் உலவுகின்றன. இந்த நிலையில் தென்கொரிய நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் கிம் இயோன் சுல், கிம் ஜோங் உன் உயிரோடு தான் இருக்கிறார் என்றும் அவர் வட கொரியாவின் கடற்கரை பிரதேசமான வோன்சன் ஏரியா (Wonsan area) வில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த தகவல் தங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் தெரியும் என முதலில் கூறிய அவர், பின்னர் அதை திருத்தி, கிம் ஜோங் உன்னின் உடல்நலம் மட்டுமே டிரம்பிற்கு தெரியும் என்றும், இருக்கும் இடம் தெரியாது என்றும் விளக்கம் அளித்தார்