புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2020

அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெடுத்த போதிலும் அவர்களுடன் பேச மறுத்திருந்த நிலையில் இன்று காலை சுவாமியறையில் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளாள்.

மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றினை பெற முடியாமல் போவதும், சித்தியடையாமல் போவதும் அவமானம் கிடையாது. பரீட்சை பெறுபேறுகளை தாண்டி நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது அதிகமுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்