புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2020

கோப்பாயில் இருந்து வெளியேற்றம் - புதிய தங்குமிடம் தேடும் இராணுவம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
விடுமுறையை முடித்துக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் திரும்பும் படையினரை தங்க வைப்பதற்காக, கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்றிருந்தனர்.
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். விடுமுறையை முடித்துக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் திரும்பும் படையினரை தங்க வைப்பதற்காக, கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்றிருந்தனர்.

இதையடுத்து, அங்கு இராணுவத்தினர் அழைத்து வரப்பட்டு, தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்களும் தீவிரமாக செயல்பட்ட்னர்

இந்த நிலையில், இராணுவத்தினர் நேற்று மாலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, விடுப்பில் இருந்து திரும்பும் படையினரை தங்க வைப்பதற்கான தற்காலிக தங்குமிடமாக- திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் புதிய கட்டடம் அல்லது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களும் தெரிவு செய்யப்பட்டு தற்போது ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad