புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


             து ஒரு விலை மதிக்க முடியாத கைதாகத்தான் இருக் கும் என்பது அரசாங்கத்தின் கணக்காக இருந்தது. கிரானைட் மோசடி வழக்கிற்குள்ளான துரை தயாநிதிதான் தேடப்பட்டவர். தி.மு.க.வின் தலைமைக் குடும் பத்தின் உறுப்பினர். மத்திய அமைச்சரின் மகன். மதுரையின் செல்வாக்கான புள்ளி. அதனால் இந்த வழக்கு, மீடியாக்களின் கவனத்திற்குரியதாக இருந்தது. போலீஸில் சிக்காமல் 127 நாட்கள் தலைமறைவாக இருந்து, நீண்ட சட்டப் போராட்டத் திற்குப் பிறகு முன்ஜாமீன் பெற்றி ருக்கிறார் துரை தயாநிதி.நன்றி  நக்கீரன்

ஏன் இந்த குற்ற உணர்ச்சி? ஏன் இந்த தலைமறைவு? எங்கே பதுங்கியிருந்தார்? எல்லாக் கேள்விகளுக்கும் நக்கீரனிடம் தான் முதன்முதலாக மனம் திறந்தார் துரை தயாநிதி.

நக்கீரன் : உங்கள் மீது வழக்குப் பாய்ந்ததும் என்ன மனநிலைக்கு ஆளானீர்கள், சொல்லுங்கள்?

துரை தயாநிதி : அதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே. என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த ஒலிம்பஸ் கம் பெனியிலிருந்து 2008-ஆம் ஆண்டே விலகிவிட்டேன். அது போக நான் அப்ப இருந்த சினிமா பிஸியில், இந்த கம் பெனியில் எனக்கு என்ன நடக் குது என்றுகூட
த் தெரியாது. என் அப்பாவைக் காயப்படுத்திப் பார்க்கவே அப்பாவியான என் மீது வழக்குப் போட்டிருக்காங்க. பொய் வழக்கு போட்டு என்னை மட்டுமல்ல, என் நண்பர்கள், குடும்பத்தின் விசுவாசிகள் என எல்லோரையும் பெரும்பாடு படுத்திவிட்டார்கள். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.

நக்கீரன் : தப்பே செய்யவில்லை என்கிறீர்கள்? தைரியமாக வழக்கைச் சந்தித்திருக்கலாமே? தலைமறைவாகத் தேவை இல்லையே?

துரை தயாநிதி : தப்பு செய்திருந்தால் நானே சிறைக்குப் போயிருப்பேனே, நான் தப்பு செய்யாத தால்தான் தலைமறைவானேன். தப்பு செய்யாத நான் சரண்டர் ஆகி இருந்தால் தப்பு பண்ணியது போல போலீசும் ஆளும்கட்சியும் வடிகட்டிய பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பார்கள்.

நக்கீரன் : இத்தனை நாள் தலைமறைவாக எங்கு இருந்தீர்கள்?

துரை தயாநிதி : அது சஸ்பென்ஸ்... இருந்தாலும் ஒரு உண்மையைச் சொல்லியே ஆகணும். 127 நாட்களும் by road-தான். காரிலேயே பயணம். 

நக்கீரன் : காரில் எங்கெங்கே போனீர்கள்னு சொல்ல முடியுமா?

துரை தயாநிதி : பெரும் பகுதி தமிழ்நாடு தான். ஏன் சென்னை என்றே சொல்லலாம். மீதம் கொஞ்சம் கேரளா, ஆந்திரா பார்டர்கள்தான். மத்தபடி வேறு எங்கும் போகவில்லை. 

நக்கீரன் : நீங்கள் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு தப்பினீர்கள் என்று மீடியாக்களில் பரபரப்பான செய்திகள் வெளியானதே?

துரை தயாநிதி : அய்யோ... அப்படிப் போக நான் இங்கிதம் தெரியாதவனா? நான் பி.இ. பட்டம் பெற்றவன். ஒருவேளை நான் அப்படிப் போயிருந் தால் போலீசும் அரசும் அந்த ஆதாரங்களை கோர்ட்டில் காட்டியிருக்கணுமே? கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டிருக்காங்க.

நக்கீரன் : நீங்கள் தலைமறைவான 127 நாட்களும் உங்கள் அப்பா அழகிரியின் மனநிலை எப்படி இருந்தது?

துரை தயாநிதி : அம்மா, அப்பா என்னைப் பார்த்ததுமே கண்ணீர் விட்டார்கள். என் குடும் பமே கண்ணீர்விட்டது. என் பிறந்த நாள், அப்பா-அம்மா திருமண நாள்னு ஒரு வருடம் கூட அருகில் இல்லாத வருடமோ, நாளோ கிடையாது. அது எல்லாமே இந்த பொய் வழக்கால் எல்லோ ருடைய நிம்மதியையும் இழக்க வைத்துவிட்டது.

நக்கீரன் : தலைமறைவு வாழ்க்கை அனுபவம்...?

துரை தயாநிதி : 127 நாட்களும் நானேதான் எனக்கு உதவி. நானே வெந்நீர் போட்டுக் குளிப்பது, நானே சாப்பாடு ரெடிபண்ணி சாப்பிட்டது எல்லாமே நானாகப் பார்த்துக்கொண்டேன். செல்போனைக்கூட தவிர்த்துவந்தேன். கலங்கி நின்ற நாளும் கூட உண்டு. மொத்தமாக சொன்னால் சிறைக்குப் போயிருந்தால் கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன்.  அப்படிக் கஷ்டப்பட்டிருக்கேன். ஒரு அரசியல் விளையாட்டு என்னை இப்படி அலைக்கழித்தது என்பதுதான் உண்மை.

நக்கீரன்: உங்கள் குடும்பத்தினரின் மனநிலை...?

துரை தயாநிதி : முன்ஜாமீனை வைத்து மொத்த குடும்பமே ஒன்றுபட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு சாமர்த்தியக்காரனாக இனி ஒவ்வொன்றிலும் அடி எடுத்து வைப்பேன். சாமர்த்தியமான வாழ்க்கையை வாழத் தெரிந்து கொண்டேன்.

-சந்திப்பு : முகில்    

ad

ad