புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012



ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த ஆஸ்கார் விருது!


உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது ‘ஆஸ்கார் விருது’. உலக அளவில் பல பிரிவுகளின் கீழ் படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியில் ஒருவருக்கே அந்த விருது வழங்கப்படும். இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருந்துக்கு படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதிலும் அரிதான ஒன்று.

2008-09 ஆம் ஆண்டுகளில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ரிலீஸானது. 2009
-ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மொத்தமாக 8 விருதுகளை அள்ளியது ஸ்லம்டாக் மில்லியனர் படம். 8 விருதுகளில் இரண்டு விருதுகளை சிறந்த இசைக்கான பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான் தட்டிச் சென்றார். 

அதிலிருந்து ஆஸ்கார் நாயகன் என்று அழைக்கப்பட்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மறுபடியும் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ’தி லிஜண்ட் ஆஃப் சாரோ’, ’ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய அலெக்ஸ் குர்ட்ஸ்மன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பீபிள் லைக் அஸ்’ என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  சிறந்த இசையமைப்பாளர் பிரிவின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ad

ad