புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


           நூலிழையில் "தல' தப்பிய அந்த படக் காட்சிகளைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.

"பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது... உங்களின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் உங்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் இப்படிப்பட்ட "ரிஸ்க்'கை இனிமேல் எடுக்காதீர்கள்' என தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை சொன்னபோது...


"எனக்கு யாரும் அட் வைஸ் பண்ணத் தேவையில்லை' என கடுமையான வார்த்தைகளில் சொல்லியிருந்தார் அஜீத்.  நாளடைவில் பக்குவப்பட்டவராக ரேஸ்களில் கலந்துகொள் வதை கைவிட்டார்.

ஆயினும் சினிமாவில் கூடுதல் சாகஸ ரிஸ்க்குகளை எடுக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான "பில்லா -2'வில் ஜார்ஜியா நாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளில் பறக்கும் ஹெலிகாப்டரில் சாகஸம் செய்திருக்கிறார் அஜீத்.

"எதுக்கு தல இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்குறீங்க. உங்க முகத்தை ஸ்க்ரீன்ல காமிச்சாலே போதும்' என ரசிகர்கள் அன்பாக கண்டித்தனர்.

ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு சாகஸ காட்சிகளில் நடித்தபடி இருக்கிறார் அஜீத். படத்தின் வெற்றிக்கும், ரசிகனின் திருப்திக்கும் இந்த ரிஸ்க் தேவையென நினைக்கிறார் அஜீத்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அஜீத் எடுத்த ரிஸ்க்தான் நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் விபத்தை ஏற்படுத்திவிட்டது.

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிக்க "பில்லா-ஒ' டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கிவரும் பெயரிடப்படாத படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் மும்பையில் நடந்தது.

புறநகர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக ஒரு கார் வருகிறது. முன்னால் செல்லும் ஜீப்பிலிருந்து அஜீத் அந்தக் கார் மீது பாய்ந்து காரிலிருக்கும் வில்லன்களைத் தாக்கும் காட்சி. "டூப்' வைத்துக்கொள்ளலாம் என விஷ்ணுவர்தன் சொல்லியும், தானே நடிப்பதாகச் சொல்லிவிட்டார் அஜீத்.


அந்த சாகஸ காட்சி எடுக்கப்பட்டபோது தான் காலில் அடிபட்டு பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறார் அஜீத்.

இந்நிலையில்... அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அந்த விபத்துக் காட்சிகள் இப்போது வெளியாகியிருக்கிறது.

வேகமாக வருகிறது வில்லன் கோஷ்டி கார். முன்னால் செல்லும் ஜீப்பின் பின்புற டோரை திறந்துகொண்டு வில்லன் கார் மீது அஜீத் பாய வேண்டும். அந்தக் காரின் முன்புறம், பின்புறம், இடதுபுறங்களில் பாதுகாப்பிற்காகவும், காட்சியைப் பதிவு செய்வதற்காகவும் கார்கள் செல்கின்றன. வலதுபுறம் போலீஸ் ஜீப் துரத்திவர... வில்லன் கார் அருகே வந்ததும் வலது கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி ஆவேசமாக காரின் பேனட்டில் பாய்கிறார் அஜீத்.. "நானோ கார்' போல முன் பகுதி வழுக்கலாக இருப்பதால் அஜீத் பிடிமானம் இல்லாமல் சறுக்குகிறார். இருந்தும், வயிற்றுப் பகுதியில் பேலன்ஸ் பண்ணியபடியே தன் உடலை உந்தி பேனட்டில் ஏறப் பார்க்கிறார். கையிலிருக்கிற துப்பாக்கியை விடாததால் அவரால் பேலன்ஸ் பண்ண முடியாமல் போகிறது. காரின் வேகத்தில் அஜீத்தின் கால்கள் ரோட்டில் பலமாக உரசுகிறது.  சறுக்கியபடி சக்கரத்துக்குள் சிக்கும் சூழலில்... அஜீத் வலியால் அலற... அதுவரை "நடிப்பு' என காரை ஓட்டியபடி வந்த ஸ்டண்ட் கலைஞர் காரை நிறுத்த... சுற்றிலும் காரில் வந்த யூனிட் ஆட்களும் கார்களை நிறுத்திவிட்டு அஜீத்தை நோக்கி ஓடிவர... வலியால் துடித்தபடி எழ முடியாமல் அஜீத் பேனட்டிலேயே சுருண்டு கிடக்கிறார்.

அந்த பதைபதைப்பு வீடியோவைப் பார்த்தாலே திகிலா இருக்கிறது. 

விபத்துக்குப் பின் என்ன நடந்தது?

காலில் அடிபட்ட அஜீத்திற்கு முதலுதவி சிகிச்சை செய்யப்படுகிறது. அதன்பின் மும்பையின் பிரபல மருத்துவமனைக்கு அஜீத் அழைத்து வரப்பட்டார். மருத்துவர்கள் டீம் சிகிச்சை அளித்த பின் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்கிறார்கள்.

பரிசோதனை ரிப்போர்ட்களைப் பரிசோதித்த டாக்டர் ஜோஷி, "பெரிய அளவில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் கால் பெருவிரல் பகுதியில் ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷன்  செய்யாம விட்டா பின்னாளில் அந்தப் பாதிப்பு கண்டிப்பா இருக்கும். அதனால் ஆபரேஷன் பண்ணிக்கங்க' என்கிறார்.

ஆபரேஷன் முடிஞ்சதும் திரும்ப எப்ப நான் ஷூட்டிங் போக முடியும்?' என அஜீத் கேட்க... "8 வாரங்கள் கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்' என்கிறார் டாக்டர் ஜோஷி.

சென்னை போய் முடிவு செய்துவிட்டு வருவதாகச் சொல்கிறார் அஜீத்.

விஷ்ணுவர்தன் படத்தில் நயன்தாரா, ஆர்யா என அஜீத் காம்பினேஷனில் காட்சிகள் எடுக்கணும். ஆர்யா பிஸி ஷெட்யூல். இந்த கால்ஷீட்டை விட்டால்... படம் முடிய தாமதமாகும். அதோடு "சிறுத்தை' சிவா இயக்கத்தில் அடுத்த படமும் உடனே தொடங்கும் நிலை. இதையெல்லாம் யோசித்த அஜீத், "இப்போதைக்கு ஆபரேஷன் வேண்டாம்' என முடிவு செய்து சில நாட்கள் ரெஸ்ட் எடுத்தார்.

அதன்பின் படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார். காலில் கடுமையான வலி இருக்கிறது. இதற்காக "டழ்ஹஸ்ரீங்' எனப்படும் பெயின் கில்லர் பேண்டேஜ் போட்டுக் கொண்டு நடித்து வருகிறார் அஜீத்.

"ரெஸ்ட் எடுங்க' என வற்புறுத்தியும் " "பிரேஸ்' போட்டுக்கிட்டா வலி இல்லப்பா' எனச் சொல்லி சென்னையில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

"ஜூன்-ஜூலையில் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, சார் ஆபரேஷன் பண்ணிக்கத் திட்டமிட்டிருக் கார். அதுவரைக்கும் வலியோடதான் வாழ்க்கை' என்கிறார்கள் அஜீத் வட்டாரத்தில்.

ஆக்ஷன் ஹீரோவுக்கு "ரிஸ்க்' அழகுதான். என் றாலும் தவிர்க்க முடிந்த "ரிஸ்க்'குகளை தவிர்க்கலாமே தல.

-இரா.த.சக்திவேல்

ad

ad