புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012

 ""ஹலோ தலைவரே... பெரியார் நினைவு நாள், எம்.ஜி.ஆர் நினைவு நாள்னு இரண்டு நிகழ்வுகளை இந்த வாரம் கடந்து வந்திருக்கோம்.''Nakeeran
""ஆமாப்பா.. தன் 95 வயது வரைக்கும் இந்த மக்களோட இழிவுநிலை நீங்கி, சமூக விடுதலை கிடைக்கணும்னு பாடுபட்டவர் பெரியார். கடைசிக் காலத்தில் மூத்திர சட்டியை ஏந்திக்கிட்டு பிரச்சாரம் செய்தார். அவரை மறக்காமல் பல கட்சியினரும் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துறாங்க. ஆனா, அவர் எந்த சாதி ஏற்றத்தாழ்வை
எதிர்த்துப் போராடி னாரோ, அந்த  சாதியைத் தூக்கிப்பிடித்து அரசியல் செய்யும் போக்கும் சமீபகாலமா அதிகரிச்சிக்கிட்டி ருக்குங்கிறதுதாம்ப்பா வேதனை.''

""பெரியார் நினைவுநாளான டிசம்பர் 24 தான் எம்.ஜி.ஆருக்கும் நினைவுநாள். அவர் 1973-லும் இவர் 1987-லும் காலமானாங்க. இறந்து 25 வருசமாகி விட்டாலும், எம்.ஜி.ஆரோட பக்தர்கள் அவரை  மறக்காம ஒவ்வொரு வருசமும் அவர்  படத்துக்கு அலங்காரம் பண்ணி, மாலை போட்டு வீதிக்குவீதி அஞ்சலி செலுத்துறது வழக்கம். கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிற எம்.ஜி.ஆர் பக்தர்களும்கூட இதை செய்வாங்க. இந்த வருசமும் அப்படித்தான்.'' 

""எம்.ஜி.ஆர் சமாதி புதுப்பிக்கப்பட்டிருப்பதால இந்த வருசம் சென்னையிலும் எம்.ஜி. ஆர் நினைவு நாள் சிறப்பா இருந்திருக்குமே?''


""புதுப்பிக்கப்பட்ட சமாதியில் இருப்பது இரட்டை இலையா, குதிரையோட இறக்கையாங் கிற வழக்கு நடந்துக்கிட்டிருக்கு. சமாதியைப் பார்க்க வந்த அ.தி.மு.க.வினர் பலரும், நம்ம கட்சி சின்னமான இரட்டை இலையை வாசலிலேயே வச்சி அசத்திட்டாங்கன்னு ஓப்பனாவே சொன் னாங்க. இப்படிப் பலரும் சொல்வதைக் கேட்ட அ.தி.மு.க வக்கீல் ஒருத்தர், யாரும் சத்தமா பேசாதீங்க. டி.வி.க்காரங்க மைக்கை நீட்டினா பேட்டி கொடுக்காதீங்கன்னு கண்டிஷன் போட்டுக்கிட்டே இருந்தார்.'' 

""ஜெயலலிதா தலைமையில்  அமைதி ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு இதெல்லாம் டிசம்பர் 24-ந் தேதி நடக்குமே!''

""இந்த முறையும் அப்படித்தான்… உறுதி மொழியை ஓ.பி.எஸ். வாசிச்சாரு. அதை எல்லோரும் திருப்பிச் சொன்னாங்க. ஜெயலலிதா ஆரம்பத்திலும் கடைசியிலும் மட்டும் தான் திருப்பிச் சொன்னாங்க. ஏன்னா, அந்த உறுதிமொழி யின் ஆரம்பத்தில் 4 இடத்தில் மட்டும் புரட்சித்தலைவர்னு குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கப்புறம் 19 முறை புரட்சித்தலைவி புகழ்மாலை. அவங்களே அவங்களை உச்சரிக்கணும்னா தர்மசங்கடமா இருக்கும்ல.. அதனாலதான்.'' 

""எம்.ஜி.ஆர் நினைவுநாளில் அ.தி.மு.க தொண்டர்களோட மன நிலை  என்ன?''

""அவங்க வழக்கம்போல உற்சாகத்தோடு வந்திருந்தாங்க.. உறுதிமொழி ஏற்பு மேடையில்  பி.ஹெச்.பாண்டியன் பேசுறப்ப ரஷ்யாவிலே இருக்கிற லெனின், ஸ்டாலின் நினைவிடங்கள் மாதிரி எம்.ஜி.ஆர் சமாதியை ஜெ. வடிவமைச்சிட்டதா பாராட்டுனாரு. தொண்டர்களோ, ஒவ்வொரு வருசமும் எம்.ஜி.ஆர்.  நினைவு நாள் ஊர்வலத்தில் ஜெ. கலந்துக்கணும்னு பேசிக்கிட்டாங்க. நிர்வாகிகளில் சில பேர், அடுத்த வருசம் முதல்வர் கலந்துக்குவாரா மாட்டாரான்னு தெரியலைன்னு சொன்னாங்க.''

""ஏன் இப்படியொரு சந்தேகம்?''

""பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்குற சொத்துக் குவிப்பு வழக்குதான் காரணம். சனிக்கிழமை யோடு 1032 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, பெருமூச்சோடு வெளியே வந்தாரு சசிகலா. ஏற் கனவே மல்லிகார்ஜூனய்யா நீதி பதியா இருந்தப்ப, கோர்ட்டில் சசிகலா சொல்லும்போது, ஜெ.வுக்கு எதிரா நடந்துக்கலைன்னா கேஸ் போடுவோம்னு சொல்லி கலைஞர் தான் என் மேலே கேஸ் போட் டார்னு சொன்னார். அரசியல் பேசாதீங்கன்னு மல்லிகார்ஜூனய்யா சொல்லிட்டார். அதுக்கு சசிகலா, இப்படி மிரட்டுறது நல்லா இல்லைன்னு நீதிபதியை பார்த்து சொன்னார். இப்ப புது நீதிபதி பாலகிருஷ்ணன்கிட்டேயும் அதே குற்றச்சாட்டைத்தான் இன்னும் ஷார்ப்பா சொன்னார் சசிகலா.''

""என்ன சொன்னார்?''

""ஜெயலலிதா மேல சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு 2 மாசம் கழிச்சித்தான் என் மேலே கலைஞர் வழக்குப் போட்டார். அரசுப் பதவியில் இல்லாத என் மேலே ஊழல் தடுப்பு சட்டத்தில் கேஸ் போடுறது பொருந்தாது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராமாறணும்ங்கிறதுக்குத்தான் கலைஞர்  இப்படி செய்தார்னு சசிகலா சொன்னார்.'' 

""ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்மேலே கேஸ் போட முடியாதுங்கிறதைத்தான் சசிகலா தரப்பு தன்னோட வாதமா வைக்கப் போகுதுங்கிறதை போனமுறைதான் நாம் பேசிக்கிட்டிருந்தோம். அதுவேதான் கோர்ட்டிலும் நடந்திருக்கு..''

""ஆமாங்க தலைவரே.. 313 ஸ்டேட்மெண்ட்படி, கேள்விகளுக்குப் பதில் சொன்னதும் எழுத்துப்பூர்வமா ஸ்டேட்மெண்ட்  கொடுக்கணும். இத்தனை சீக்கிரமா கேள்வி-பதில் பகுதி முடியும்னு சசிகலா தரப்பு எதிர் பார்க்கலை. அதனால, எழுத்துப்பூர்வமான ஸ்டேட் மெண்ட்டை அவங்க வக்கீல்கள் ரெடி பண்ணலை. அதற்கு அவகாசம் கேட்டிருக்காங்க. கேஸ் இவ்வளவு வேகமா போறதால, கார்டன் தரப்பு ரொம்ப ஜாக்கிரதையா மூவ் பண்ணுது.''

""என்ன மூவ்?''

""வர்ற புதன்கிழமையன்னைக்கு வளர்ப்பு  மகன் சுதாகரன்கிட்டே 313 ஸ்டேட்மெண்ட் ஆரம்பிக்குது. கார்டனிலிருந்து  அவர்கிட்டே  பேசியிருக்காங்க. இப்ப சுதாகரனுக்கு வக்கீலா இருக்கிறவரை வேண்டாம்னு சொல்லிட்டு, வேற வக்கீல் பெயரைச் சொல்லி அவரை வச்சி கேஸை நடத்தணும்னு சொல்லப்பட்டதாம். பழைய வக்கீலுக்கு 17 லட்ச ரூபாய் ஃபீஸ் பாக்கியிருக்குதாம். கேஸ் பற்றி மாஜி வளர்ப்பு மகனான சுதாகரன்கிட்டே ஜெ.வே பேசியிருக்காருன்னா இதை கார்டன் எவ்வளவு சீரியஸா பார்க்குதுங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். 750 கேள்விகளுக்கு சுதாகரன் பதில் சொல்லியாகணும். அடுத்ததா, இளவரசி. போகிற வேகத்தைப் பார்த்தால் மார்ச்சுக்குள் கேஸ் முடிஞ்சிடும். என்னென்ன பாயிண்ட்டுகளை வச்சி தப்பிக்கிறதுன்னு ஆலோசனை நடந்துக்கிட்டிருக்கு. வழக்கு சாதகமா இல்லைன்னா, அதற்கு ஸ்பீடு பிரேக் போடுறதுக்கான வேலையை தனியா ஒரு டீம் பார்த்துக் கிட்டிருக்கு.''

""மதுரை வரைக்கும் போய் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  ஒரு டீம் உருவாக்குனாரு. ஆனா, அமைதியை குலைக்கும் விதத்தில் செயல்படுவதா கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருக்காரே..!''

""ஆமாங்க தலைவரே.. .. சாதி சங்கத்தினரைக் கூட்டி மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் கூட்டம் போட்டார் ராமதாஸ். உளவுத்துறை போலீசார் அங்கிருந்து வீடியோவை எடுத்து, அதோடு ஒரு நோட் போட்டு மேலிடத்துக்கு அனுப்பிட்டாங்க. நோட்டைப் பார்த்த ஜெ., தலித்துக்கு எதிரா ராமதாஸ் பேசியதையும், எம்.ஜி.ஆரை வந்தேறின்னு பேசியதோடு இப்ப நடக்கிற ஆட்சியும் வந்தேறி ஆட்சிதான்னு கேட் டுட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துற மாதிரி பேசியிருக்கிறதால, சட்டப்படி நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டாராம். மேலிடத்து உத்தரவையடுத்துதான், ராம தாசுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியதோடு, அதை மீடியாக்களுக்கும் அனுப்பிவச் சிட்டு, தைலாபுரம் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாம். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு ராமதாஸ் தரப்பு இருக்குதாம்.''

""அடுத்த தகவல்?''

""டெல்லியிலிருந்து கிடைச்ச ஒரு  முக்கியமான தகவலை சொல்றேங்க தலைவரே.. தலைநகரை உலுக்குற மாதிரி மாணவர்களும் இளைஞர்களும் நடத்துன போராட்டம் இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. ஏற்கனவே அந்நிய முதலீடு உள்பட பல  பிரச்சினைகள். அதனால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வரும்னு எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்போடு தயாராகிக் கிட்டிருக்கு.'' 

""அப்படின்னா தமிழக அரசியல் களமும் சூடாகிடுமே.''…

""இங்கேதான் பெரிய  கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஏற்கனவே தேர்தல் வேலைகளைத் தொடங்கிடிச்சி. முதலில் அ.தி.மு.க.தான் வேலையை ஆரம்பிச்சிது. இப்ப தி.மு.க.வும் வேகமெடுத்திருக்கு. கூட்டணி விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க பெருசா அலட்டிக்கலை. ஆளுங்கட்சியா இருப்பதால செல்வாக்கு, பணமும், பலமும் இருக்குது. அதோடு தேர்தல் கமிஷனர் சம்பத்தும் போலீசும் இருப்பதால் இதைவிட பெரிய கூட்டணி எதுவும் இருக்கமுடியாதுன்னு அ.தி.மு.க தலைமை  நம்புதாம்.''

""தி.மு.க.வோட கூட்டணி மூவ்?''

""கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்ங்கிறதுதான் தி.மு.க.வோட இப்போதைய கணக்கு. அதோடு புதுக் கட்சிகளும் கூட்டணியில் சேரும்னு எதிர்பார்க்கப் படுது. அதனால 20  தொகுதிகளில் தி.மு.க., 7 தொகுதிகளில் காங்கிரஸ், 7 தொகுதிகளில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகளுக்கு 1, முஸ்லிம் லீக்குக்கு 1. மீதமுள்ள 4 தொகுதிகள் ரிசர்வில் இருக்கு. டெல்லி அரசியல் தட்பவெப்பத்தைப் பொறுத்து தொகுதி உடன்பாடுங்கிற அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் அவங்களுக்காக இந்த 4 சீட்டாம். இல்லைன்னா, கூட்டணியில் சேரும்  மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப் படுமாம்.''

""தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் ஓ.கே.வா?''

""அதைப் பற்றி நான் சொல்றேன்.. தே.மு.தி.க சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த்தோடு பேராயர் எஸ்றா சற்குணம் கலந்துக்கிட் டாரு. எஸ்றா சற்குணம் எப்பவும் கலைஞர் பக்கம் இருக்கிறவர். அவர்  பேசுறப்ப, நல்லவர்கள் வல்லவர்களோடு சேருங்க’ன்னு சொன்னார். விஜயகாந்த் பேசுறப்ப, கூட்டணி சேர்வது பற்றி இறைத்தூதர் போல பேராயர் பேசியிருக்காரு. நானும் நல்லவர்கள், வல்லவர்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. இது கூட்டணிக்கான  அச்சாரமான்னு தே.மு.தி.க நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தேன். எதுவும் இன்னும் ஓப்பனாகலை. எல்லாம் அங்கங்கே மூவ் ஆகிக்கிட்டிருக்குன்னு சொல்றாங்க.''

படங்கள் : ஸ்டாலின் & அசோக்

ad

ad