புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


அவுஸ்திரேலியா மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் உணர்வார்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

பிரபல பொக்ஸிங் டே கிரிக்கட் போட்டியில் எதிர்ப்பை வெளியிட்டால் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ஆட்சி நடைபெறாத காரணத்தினால் சிம்பாப்வே அணி எவ்வாறு புறக்கணிக்கப்பட்டதோ அதேபோன்று, இலங்கையையும் உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படும் வரையில் இலங்கையுடன் கிரிக்கட் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad