புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013



பிரபாகரன் மகன் கொலை: நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசு 
 

இலங்கை இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனால் அது உண்மையல்ல  பொய் என சேனல் - 4 ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. 


சிறுவன் பாலசந்திரனை பிடித்து சென்று ராணுவ முகாமில் தங்க வைத்து, அவனுக்கு பிஸ்கட் மற்றும் தின் பண்டங்கள், தண்ணீர் கொடுத்து சிறிது நேரத்தில் சுட்டு கொன்றது அம்பலமாகியுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் மனித உரிமை மீறல் நெருக்கடியை கொடுத்துள்ளது. 
2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதாக ஐ.நா. விசாரணை குழு அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இதை சிங்கள அரசு மறுத்துள்ளது. சேனல் 4 வெளியிட்டுள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என கூறியுள்ளது. 
இதற்கிடையே பிரபாகரன் மகனை இலங்கை ராணுவம் பிடித்து சென்று சுட்டு கொல்லவில்லை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பரிகேடியர் ரூபின் வானிக சூர்யாவும் கூறியுள்ளார். ஆனால், பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை ராணுவம் பிடித்து சென்று சுட்டுக் கொன்றது. உறுதி செய்யப்பட்டால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசு பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். 
வருகிற மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குறித்த மற்றொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது. அதில் இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை நடைபெற உத்தரவிட வலியுறுத்தபட உள்ளது. 
மேலும் பல புதிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட போவதாக சேனல் 4 டி.வி.யின் இயக்குனர் கால்லம் மாக்ரே அறிவித்துள்ளார். இது போன்ற நெருக்கடி களால் இலங்கைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ad

ad