புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


சிறிலங்காவிற்கு ஐ.நா மனிதஉரிமை சபை இராஜதந்திரக்களமாக மாறியுள்ளது: வி.உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமை சபைக்கூட்டத் தொடர் சிங்கள அரசுக்கு இராஜதந்திரப் போர்களமாக மாறியுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் நவநீதிம்பிள்ளையினால் வெளியிடப்படும் கண்டனங்கள் சிங்கள அரசுக்கு தூக்குக்கயிறாகவும் மாறிவருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்த வடஅமெரிக்க தமிழர் ஊடகப் பிரதிநிதிகளுக்கான சந்திப்பின் பிரதான உரையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் அமர்வானது ஈழத்தமிழ் மக்களாலும் மற்றும் உலகத் தமிழர்களாலும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
சர்வதேச அரங்கொன்றில் தமிழர்கள் மீது சிறிலங்கா மேற்கொண்டு வரும் அநீதியினை உலக நாடுகளின் முன் அம்பலப்படுத்துவதோடு, அது ஈழத் தமிழினத்தின் மீது புரிந்த இனஅழிப்புக்கு சுயாதீனமான ஓர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதோடு, தமிழர்களின் நியாயமான உரிமைச் போராட்டத்தினை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையினை நோக்கி எமது செயற்பாடுகள் அமைகின்றன.
இந்த நோக்கோடு பல தமிழ் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. இதில் நாம் ஓர் அரசாங்கம் என்ற நிலையில் நின்றவாறு மிகவும் கவனமான செயற்பட்டு வருகின்றோம்.
ஐ.நா மனித உரிமைகள் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வல்லுனர்கள் கொள்கின்றார்கள்.
சிறிலங்கா தொடர்பில் சுயாதீனமான ஓர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தும் வகையில் நீதிகோரும் “தபால் அட்டை” பிரசார போராட்டமொன்றினையும் நாம் தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம்.
பல்வேறு உலக நாடுகளை நோக்கியதான இந்த நீதி கோரும் “தபால் அட்டை” பிரசார போராட்டமானது, ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் பரந்து வாழுகின்ற தமிழகம் மலேசியா தென்னாபிரிக்கா என இது அமையவிருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய எமது செயற்பாடுகளில் மனித பிரதானமாக தாயகத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் முதன் கை கொடுக்கவுள்ளோம்.
மேலும் இலங்கைத்தீவில் நமது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியானது வெறுமனே மனிதர்கள் என்ற அடிப்படையில் இழைக்கப்படவில்லை மாறாக தமிழர்கள் என்ற காரணத்தினால் தான் எம்மீதும் இத்தகைய அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்ற என்பதனையும் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தளவில் அதன் செயலாளர் நாயகம் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை அல்லது நடவடிக்கை முயற்சிகளில் தீவிரமான செயற்படக்கூடிய வழிமுறைகள் பற்றியும் நாம் விவாதித்த வருகின்றோம்.
இவ்வேளை ஐ.நா மனித உரிமைசபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டிய கடமை ஒன்று உள்ளது. காரணம் தனது மனித உரிமைகள் சபையின் வழியே அவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் நமக்கு நம்பிக்கை தருவதாக இருப்பதோடு, சிங்கள அரசுக்கு தூக்கு கயிறாகவும் உள்ளதை நாம் நன்கு கவனித்து வருகின்றோம்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பிரதான உரையில், ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம் அமைந்திருந்ததோடு விரைவில் முரசறையவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் மற்றும் தமிழினத்திற்கான சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை முன்னிறுத்தும் செயற்திட்ட குறித்தும் அவர் எடுத்துரைத்திருந்தார்.
மேலும்,, தாயகத்தில் உள்ள 1000 மாவீரர் குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்கவும் நமது தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றதெனவும், நமது தேசியத்தையும் நமது தேசத்தையும் அடையாளப்படுத்தி கொள்ள தமிழீழத் தேசிய அடையாள அட்டையை அனைத் தமிழ் உறவுகளும் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.
நன்றி கனடாமிரர் (canadamirror.com)

ad

ad