புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013

இலங்கை அரசை எதிர்த்து கண்டன அறப்போர்: வைகோ

இலங்கை அரசை எதிர்த்து மார்ச் 4ம் தேதி தமிழகமெங்கும் கண்டன அறப்போராட்டமும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத்தமிழர் படுகொலைக் காட்சிகள், சேனல்-4 காணொளி ஆதாரங்களோடு, ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இப்போது பிரபாகரனின் இளைய புதல்வன், 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, பின்னர் அச்சின்னஞ்சிறு பாலகனையும் சுட்டுக் கொலை செய்த கொடுமை, கோடானுகோடி தமிழர்களை மனம் பதறச் செய்து, உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பவும், நீதி கேட்கவும், சிங்கள கொலைகார ராஜபட்ச அரசை கூண்டில் நிறுத்தி தண்டிக்கக் கோரியும், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் கோரியும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்திற்கு விடியலைப் பெறவும், ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன் லட்சக் கணக்கான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மார்ச் 4 ஆம் தேதி மாபெரும் மக்கள்கூடல் நிகழ்ச்சியில் அறப்போர் கொடி உயர்த்தி முழங்க இருக்கிறார்கள்.

எனவே, வருகிற மார்ச் 4 ஆம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கட்சி அடையாளங்கள், கட்சிக் கொடிகள் இன்றி, கருப்புக்கொடிகள் ஏந்தி சிங்களக் கொலைகார அரசை அனைத்து உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கக்கோரியும், சிங்கள இனவாத அரசைக் கண்டித்தும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதே நாளில் தலைநகர் சென்னையில், சிங்களக் கொலைகார அரசை எதிர்த்து இலங்கை தூதரகத்தைக் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தவும், பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறப்போராட்டத்தை வீறுகொண்ட உணர்ச்சிப் போராட்டமாக நடத்திடவும், தமிழ்ப் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கிலே இதில் பங்கு ஏற்கவும் வேண்டுகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ad

ad