புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


இலங்கை அரசை கடுமையாகச் சாடியுள்ள நவநீதம்பிள்ளை! ஜெனீவாவில் நெருக்கடி நிலை: சனல்4 ஊடகம்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரித்தானிய தொலைக்காட்சியான சனல்4 மேற்கொண்டு நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய மற்றும் இலங்கை குடியுரிமையுள்ள ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்க விடயம். இலங்கை அரசாங்கம் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
மேலும், இலங்கை அரச படைகள் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொலைகள் தொடர்பாக இலங்கை அரசானது இராணுவ நீதிமன்றங்களை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் எதிர்வரும் மார்ச்ச மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பாக தாம் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad