புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு : தடுத்து நிறுத்தினார் கனிமொழி!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தி.மு.க நிர்வாகி ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியபோது அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார் தி.மு.க எம்.பி கனிமொழி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட எம்.பி. நிதியில் இருந்து ரூ.25 இலட்சத்தை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார். 

மேலும், இந்த விழாவிற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் பேசிய திமுக மகளிர் அணியைச் சேர்ந்த சீனியம்மாள் என்பவர், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினார். 

நாகரீகம் அற்ற சொற்களை பயன்படுத்தியும் உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அருவருக்கத்தக்க வகையில் அவரது பேச்சு அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

உடனே கனிமொழி சீனியம்மாளின் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டார். கனிமொழி திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு பெண்ணை, அதுவும் முதல்வராக உள்ள ஒரு பெண்மணியை, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் தனது முன்னிலையில் பேசியதை பொறுக்க முடியாமல் தனது கட்சியினருக்கு நாகரீகமாக நடந்து கொள்ள உத்தரவிட்டது அவருக்கு கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 

ad

ad