புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
வாசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரின் முடிவில், அனைத்துலக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக் கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண  இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad