புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை

 ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர்
விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் விமானத்தில் பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும், விமானியையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த 50மில்லியன் டொலர் பெறுமதியான வைரக்கற்களை கொள்ளையிட்டு கொண்டு தப்பி சென்றுள்ளனர். எனினும் இச்சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் எதுவும் செய்யப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது சுவிஸிற்கு எடுத்து வருவதற்காக ஒரு சூட்கேசில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வைரக்கற்கள் என தெரிவிக்கப்படுகிறது.  கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வானும் காரும் ப்ரூசெல்ஸ் நகரின் மேற்கு பகுதியில் முற்றாக எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன எஞ்சின் இலக்க அடையாளங்களை அழிப்பதற்காக தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad