புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013

உலகின் பாரிய தேடுதல் தளமான விக்கிபீடியா வில் கட்டுரை களை எழுதத்  தொடங்கியதையிட்டு எனக்கு வந்த நன்றி கடிதம் எனது முதல் கட்டுரையே புங்குடுதீவு என்பதாகும் 
சிவ-சந்திரபாலன் 


நன்றி

வணக்கம் சிவா சந்திரபாலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புங்குடுதீவு கட்டுரையில் பல தகவல்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. பிரபலமான நூல்கள் என்ற உப தலைப்பில் சேர்த்த பட்டியல்கள் அனைத்தும் தலைப்புக்குப் பொருத்தமில்லாதவை. அவை புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் எழுதிய பிரபலமான நூல்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை புங்குடுதீவைப் பற்றியவை அன்று. இதனால் அவற்றை நீக்கியிருக்கிறேன். புங்குடுதீவு பற்றி எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைச் சேருங்கள். நூலகத்தில் இருக்கும் இரண்டு நூல்களைப் பறிய விபரங்களை வெளி இணைப்புகளாகத் தந்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:30, 21 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]சில கருத்துகள்

வணக்கம் சிவா-சந்திரபாலன். பார்க்க மடத்துவெளி சனசமூக நிலையம் மற்றும் எஸ். கே. மகேந்திரன். ஆங்கிலத்தில் கட்டுரைகளுக்கு தலைப்பிடுவதில்லை ஆதலால் தமிழில் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, இதுவிக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும், இது குறித்து உங்கள் விளக்ககளை இங்கேயோ, கட்டுரை பேச்சுப் பக்கத்திலோ தெரிவிக்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு)02:17, 27 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]பயனர் பக்கம்

வணக்கம், Siva-sandrabalan! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 28 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

ad

ad