புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

நிறைவுபெற்றது தேர்தல் வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.


இரண்டு மாகாண சபைகளின் சார்பில் 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் இன்று போட்டியிட்டனர்.

இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 42 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.

தேர்தல் நடைபெறும் ஆறு மாவட்டங்களிலும் 4,253 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

608 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணியளவில் தபால் மூல வாக்கு முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாலையில் சகல தேர்தல் முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

ad

ad