புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அஸ்வின் அபாரம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்புரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை (குரூப் 2) சந்தித்தது. தொடர்ந்து 3–வது முறையாக டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணி முதல் 3 ஓவரில் 20 ரன்கள் எடுத்தது. 4–வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தமிம் இக்பால் (6 ரன்) மற்றும் சம்சுர் ரகுமானை (0) வெளியேற்றி ‘இரட்டை செக்’ வைத்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான ஷகிப் அல்–ஹசனும் (1 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவரில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 27 ரன்களுடன் தத்தளித்தது.
139 ரன் இலக்கு
நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் பலமான நெருக்கடி அளித்த இந்திய அணி வங்காளதேசத்தின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தியது. இருப்பினும் அனமுல் ஹக் (44 ரன், 43 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (24 ரன், 4 பவுண்டரி), மக்முதுல்லா (33 ரன், 23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி வங்காளதேச அணி கவுரவமான நிலையை எட்ட வழிவகுத்தனர்.
20 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. பின்னர் 139 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.
ஸ்கோர் போர்டு
வங்காளதேசம்
தமிம் இக்பால் (சி) ரெய்னா (பி) அஸ்வின் 6
அனமுல் ஹக் (பி) மிஸ்ரா 44
சம்சுர் ரகுமான் (சி) ரோகித் (பி) அஸ்வின் 0
ஷகிப் அல்–ஹசன் (பி) புவனேஷ்வர்குமார் 1
முஷ்பிகுர் ரஹிம் (சி) கோலி (பி) ஷமி 24
நசிர் ஹூசைன் (ஸ்டம்பிங்) டோனி (பி) மிஸ்ரா 16
மக்முதுல்லா (நாட்–அவுட்) 33
ஜியார் ரகுமான் (சி) ஜடேஜா (பி) மிஸ்ரா 0
மோர்தாசா (நாட்–அவுட்) 6
எக்ஸ்டிரா 8
மொத்தம் (20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 138
விக்கெட் வீழ்ச்சி: 1–20, 2–20, 3–21, 4–67, 5–82, 6–131, 7–131
பந்து வீச்சு விவரம்
புவனேஷ்வர்குமார் 3–0–21–1
அஸ்வின் 4–0–15–2
முகமது ஷமி 3–0–29–1
ரவீந்திர ஜடேஜா 4–0–30–0
ரெய்னா 2–0–11–0
அமித் மிஸ்ரா 4–0–26–3


ad

ad