புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014


கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
news
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியதுடன், ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளனர் சம்பவம் குறித்து கேட்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 23ஆம் திகதி இராணுவத்தினரால் வட்டுக்கோட்டைப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் கோபியின் நண்பன் என்ற சந்தேகத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியில் வைத்து மன்னாரைச் சேர்ந்த மாணிக்கம் காந்தலயன் என்பவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

அதன்போது, அநேகமானவர்கள்  வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ளவர் தீயபழக்க வழக்கம் அற்றவர் அவரை விடுவிக்குமாறு கூறினர்.

எனினும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து  துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் கைப்பெற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் விசாரணைகளை ரி.ஐ.டியினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

ad

ad