புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014


பலத்த போராட்டத்தின் பின்னர் வென்ற தென்னாபிரிக்கா .நெதர்லாந்தின் அபார ஆட்டம்
சிட்டகாங்: 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 10 சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள்
வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
 சிட்டகாங்கில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. 

தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா, 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கேப்டன் டூ பிளஸ்ஸி 24 ரன்களும், டி வில்லியர்ஸ் 21 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய நெதர்லாந்து அணியின் மாலிக் ஜமீல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மைபர்க்கும், ஸ்வார்ட்டும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். ஸ்வார்ட் 8 ரன்களில், ஆட்டமிழக்க தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை, நாலாபுறமும் விளாசி ரன்கள் குவித்த மைபர்க், சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் மூன்றாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ரன்கள விளாசிய மைபர்க், டூமினியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் பர்ரேஸி, கேப்டன் பீட்டர் பார்ரன், டாம் கூப்பர் ஆகிய வீரர்கள் அதிரடியாக விளையாடி போதும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். நெதர்லாந்து அணி 134 ரன்களுக்குள் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்தால் போட்டி மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்களே தேவையாக இருந்த நிலையில் கடைசி விக்கெட்டை, வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரிக்ஸ் வீழ்த்தினார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ad

ad