புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:

லீ நா - செரீனா பலப்பரீட்சை

அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதியாட்டத்தில் செரினா- லீ நா மோதுகின்றனர்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- மரியா 'ரபோவா (ர'pயா) பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் செரீனா 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் 'ரபோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சீனாவின் லீ நா , சிபுல்கோவா இடையோன போட்டியில் 7-5,2-6,6-3 எனும் வித்திசத்தில் லீ நா வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் செரீனாவைச் சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் முதனிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்)- ரோனிக் (கனடா) மோதினர். இதில் ரபெல் நடால் 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் தோமஸ் பெர்டிச் (செக்குடியரசு)- டோகோபோவ் (உக்ரைன்) மோதினர். இதில் பெர்டிச் 6-4, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

ad

ad