புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் மர்மமான முறையில் காணமல்போன "நிடா" சடலமாக மீட்ப்பு 
பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் டிசம்பர் மாதம் மர்மமான முறையில் காணம்ல்போன "நிடா" என்னும் ஆசியப் பெண்ணின் சடலத்தை பொலிசார் நேற்று கண்டுபிடித்துள்ளார்கள்.

நிடா என்னும் 19 வயதுப் பெண், கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இரவு 8 மணிக்கு தனது வீட்டில் உள்ள கழிவு பையை வெளியே எறியச் சென்றார். ஆனால் அவர் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. வீட்டில் உள்ள சமையல் அறையில் உள்ள கழிவு பையை வீட்டிற்கு வெளியே உள்ள பின்னில் போடச் சென்றவர், நீண்ட நேரமாகத் திரும்பவில்லை என்று அவரது சகோதரி மற்றும் பெற்றோர்கள் தேடியுள்ளார்கள். இருப்பினும் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் நிடாவின் பெற்றோர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.


பொலிசார் அவரது வீட்டைச் சுற்றி தேடுதலை நடத்தினர்கள். அன்று முதன் நேற்று வரை நிடாவின் பெற்றோர் அவர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் நேற்றைய தினம் நிடாவின் வீட்டில் இருந்து சுமார் 6.5 மைல் தொலைவில் அவரது சடலம் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கடந்த 3 மாதங்களாக வரது சடலம் அங்கே இருந்ததா ? இல்லை தற்போது தான் அவர் இறந்துள்ளாரா என்ற விடையம் தெரியவில்லை. குறித்த இடத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு போட்டு தடையவியல் நிபுணர்களை அழைத்து, அவ்விடத்தை சோதித்து வருகிறார்கள். நிடா சடலமாக மீட்க்கப்பட்டது, அவ்வூர் மக்களை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயர்தர படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழக அனுமதிக்காக நிடா காத்திருந்துள்ளார். இருப்பினும் அவருக்கு பல்கலைக்க்கழகம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தற்போது பெற்றோர் கூறியுள்ளார்கள். இருப்பினும் என்ன நடந்தது என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக சவுத் வேல்ஸ் நியூ போர்ட் பொலிசார் கூறியுள்ளார்கள்.


http://www.gwent.police.uk/nc/news/article/article/body-recovered-in-newport-believed-to-be-nida-naseer/

http://www.bbc.com/news/uk-wales-south-east-wales-26792526


ad

ad