புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் இணைந்தார்.

பா.ம.க.வில் சேர்ந்தார்
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் வன்னியர் சங்க தலைவர் பா.ம.க. எம்.எல்.ஏ. குருவை நேற்று காங்கிரஸ் கட்சி பிரமுகரான மணிரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பா.ம.க.வில் இணைத்துக் கொண்டார்.
அப்போது மணிரத்தினம் கூறியதாவது:–
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட்டு கேட்டு இருந்தேன். ஆனால் வள்ளல் பெருமானுக்கு சீட்டு கொடுத்தார்கள். நான் கடந்த 4 வருடங்களாக காங்கிரசில் இருந்து கொண்டே ஏழை, எளிய மக்களுக்கு தேவையான தொண்டுகளை செய்து வருகிறேன். என்னைப்போல் உழைப்பவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இருக்கிற ஏழை, எளிய மக்களுக்கும், பொதுமக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் காங்கிரசில் பணியாற்றினேன். கடந்த 4 வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு பணி செய்து வருகிறேன். மேலும் எனக்கு அரசியல் அதிகாரம் இருந்தால் இந்த சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இன்னும் நிறைய தொண்டுகளை செய்வேன். இந்த பகுதியில் சமூக இணக்கம், ஒழுக்கம், சமூகத்தில் அமைதி இதற்காக நான் கடந்த 5 வருடங்களாக பாடுபட்டு வருகிறேன். ஏற்கனவே பா.ம.க. கட்சி செல்வாக்கு நிறைந்த பகுதி இந்த தொகுதி என்ற வகையில் நான் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள், நண்பர்களுடன் பா.ம.க.வில் இணைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓரிரு நாளில் அறிவிப்பு
வன்னியர் சங்க தலைவர் குரு கூறியதாவது:–
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மணி ரத்தினத்தை தேர்வு செய்து உள்ளோம். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் கள். மணிரத்தினம் ஏற்கனவே செல்வாக்கு உள்ளவர். சமூக தொண்டு உள்ளம் உள்ளவர். மேலும் பரீட்சையமானவர். மேலும் இந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார்.
இவ்வாறு குரு எம்.எல்.ஏ. கூறினார்.

ad

ad