புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

தமிழீழ விடுதலைப் பு​லிகளின் துப்பாக்கி​ச்சூடு குறி தவறுமா? அங்கஜனிடம் ரவிகரன் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன். பதில் கேள்விளை தொடுத்தார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
வட மாகாண சபையின் ஏழாவது அமர்வு நேற்று காலை 9.30 மணியளவில் பேரவைச் செயலகத்தில் ஆரம்பமானது.
இதில் எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி நாட்டிற்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைய வேண்டும் எனவும் உள்நாட்டுக்குள் நடக்கும் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அவர்களிடம் தீர்வை எதிர்பார்ப்பது எவ்வித பலனையும் தராது.
இது தொடர்பிலான கூட்டமைப்பினதும் மாகாண சபை உறுப்பினர்களினதும் நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இவற்றை மீண்டும் பரிசீலித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதாக தெரிய வருகிறது.
இதற்கு வடமாகாண சபையின் முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தனது கருத்தை காட்டமாக முன்வைத்திருந்தார்.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கடந்த 13ம் திகதி இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபுசிகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக கூறி அவரை தேடும் நாடகத்தை நடாத்தி குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இங்கு சமுகமளித்திருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் கேட்கிறேன் உங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி பதிலளியுங்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அல்லது அவர்களின் அமைப்பில் பயிற்சி பெற்றிருந்த நபரால் சுடப்பட்டிருந்தால் குறித்த நபர் உயிருடன் இருந்திருப்பாரா? அவர்கள் இலக்கு குறி தப்பியிருக்குமா? இவற்றை நீங்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்து இருக்கையில் அமரும்போது அவையில் அமைதி மட்டுமே நிலவியதாக அறியமுடிகிறது.

ad

ad