புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

உக்ரைன் கடற்படை தலைமையகம் பறிபோனது; ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி கொடியேற்றினர்

ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ரஷியாவுக்கு எதிராக
அவை பொருளாதார தடைகளையும் விதித்தன. இந்த நிலையில், ரஷிய ஆதரவாளர்கள் (கிரிமியா தற்காப்பு படையினர்) 200 பேர் கிரிமியா பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரான செவஸ்டாபோல் நகரில், உக்ரைன் கடற்படை தலைமையகத்தினுள் அதிரடியாக நுழைந்து, ஓசையின்றி அதைக் கைப்பற்றினர். அங்கு அவர்கள் ரஷிய கொடியை ஏற்றினர்.
ரஷிய அரசின் செய்தி நிறுவனம், உக்ரைன் கடற்படை தலைமையகத்தை ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி, கொடியேற்றியதை முறைப்படி அறிவித்தது.  இதற்கிடையே கீவ் நகரில் உக்ரைன் பொறுப்பு ராணுவ மந்திரி இஹோர் டெனியுக் பேசுகையில், கிரிமியாவை ரஷியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து, அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டாலும்கூட, எங்கள் படைகளை கிரிமியாவில் இருந்து விலக்கிக்கொள்ள மாட்டோம் என கூறினார்.

ad

ad