புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

வட,கிழக்கு ஆயர்கள் பாப்பரசருடன் பேசவுள்ளனர்.
வடக்கு கிழக்கு ஆயர்கள் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை நேரடியாகச் சந்திக்கின்றனர். போப் பிரான்சிஸ் அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படியே இந்த சந்திப்பும் நடக்கின்றது.பாப்பரசரைச்
சந்தித்துக் கலந்துரையாடவுள்ள வடக்கு கிழக்கு மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நேரில் விளக்கமளிப்பர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இலங்கையில் உள்ள கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்களை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 9 ஆம் திகதிவரை கத்தோலிக்கர்களின் தலைமைப்பீடமான இத்தாலியின் வத்திக்கான் நகரில் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் இலங்கை ஆயர்கள் குழுவில் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர்ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கையின் ஒவ்வொரு ஆயர்களையும் தனித் தனியே சந்தித்து அவர்களின் மறைமாவட்ட நிலைமைகள் தொடர்பில் நேரில் அறியவுள்ளார். இதன் போது வடக்கு கிழக்கு ஆயர்கள், நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினை, தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், அடக்கு முறைகள் என்பன குறித்து பாப்பரசருக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவர் 

ad

ad