புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

Kalaignar Karunanidhi கலைஞரின் முகநூலில்  இருந்து 
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி". 

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள் - ஒருவர் கழக நாடாளு மன்றக் குழுவின் தலைவராகவே இருந்தவர், தம்பி டி.ஆர். பாலு. - மற்றொருவர் மத்திய அமைச்சரவையில் நிதித் துறையில் இணை அமைச்சராக இருந்தவர், தம்பி பழனிமாணிக்கம் - மூன்றாமவர் அ.தி.மு.க. அமைச்சரவை யில் முக்கிய அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நம்முடைய கழகத்திற்கு வந்து, கழகப் பணிகளை அந்த வட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றிவரும் அழகு திருநாவுக்கரசு அவர்கள். இந்த மூவரில் ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; எப்படி முடிவெடுப்பது? இதிலே ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், மற்ற இருவரையும் எப்படிச் சந்திப்பது? எவ்வாறு சமாதானம் கூறுவது? ஆனால் துரைமுருகன் ஆகட்டும், டி.ஆர்.பாலு ஆகட்டும், பழனிமாணிக்கம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் எனதருமைத் தம்பிகள் அல்லவா? நான் வளர்த்தவர்கள் அல்லவா? கழக வேட்பாளர் பட்டியலை நான் அறிவித்த பிறகு டி.ஆர். பாலு தஞ்சைக்குச் சென்றதும், நேராக பழனிமாணிக்கம் வீட்டிற்குச் சென்று பொன்னாடை அணிவித்திருக்கிறார்.
பழனிமாணிக்கம் அவரை வரவேற்று கட்டிப் பிடித்துக் கொண்டு சால்வை அணிவித்ததோடு, நேற்று மாலையிலேயே செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டக் கழகத்தின் சார்பில் கூட்டி, டி.ஆர். பாலுவை வெற்றி பெறச் செய்ய அனைவரும் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டதைத் தொலைக்காட்சியிலே நான் பார்த்த போது, "என் தம்பிகள், என் தம்பிகள்தான்” என்று எனக்கு மகிழ்ச்சியும் மனதில் ஒரு துள்ளலும் ஏற்பட்டது.

ad

ad