புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற பாமக முடிவு செய்துவிட்டதாக பாமக தரப்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே பாமக கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் தொகுதிகளை பிரித்துக்கொள்வதில் 
, மோதல் இருந்து வருகிறது. பாமகவுக்கு செல்வாக்கான தொகுதிகளை தேமுதிக வலுக்கட்டாயமாக கேட்டு பிடிவாதம் செய்ததால், இரண்டு கட்சிகளுமே தொகுதிகளை விட்டுக்கொடுக்காமல் பிரச்சனை செய்தன. இவரகளை சமாதானப்படுத்த பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு முடிவும் எடுக்கப்படாததால் இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் அந்த அணியில் உள்ள கட்சிகள் பரிதவித்து வருகின்றன.

இந்நிலையில் சேலம் மற்றும் திருவண்ணாமலையை கண்டிப்பாக விட்டுத்தர முடியாது என ராமதாஸ் கண்டிப்புடன் கூறிவிட்டதால், கூட்டணியில் இருந்து பாமகவை கழட்டிவிட பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பாமக, தாமாகவே கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழகத்தில் 14 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் தனித்து நிற்க அதிரடியாக முடிவு செய்துவிட்டது. இந்த முடிவை ராமதாஸின் நெருக்கமான தலைவர் காடுவெட்டி குருவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே தனித்து நிற்கும் முடிவை ராமதாஸ் இன்று அல்லது நாளை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து பாமக வெளியேறினால் அந்த தொகுதிகளை மீதியுள்ள மூன்று கட்சிகளும் பிரித்துக்கொள்ளும் என தெரிகிறது.

ad

ad