சனி, ஏப்ரல் 05, 2014

இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 20 ஆயிரம் பேருக்கு வலை வீச்சு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
1972 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற முதல் வீரர் முதல் இதுவரை 50 ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இவர்களில் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
 
எது எப்படி இருந்தாலும் போர் முடிவடைந்துள்ள நிலையிலும் இராணுவத்தில் இருந்து தப்பியோடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.