புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2014

சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ
தெரியவில்லை சிம்புவின் இந்த காதலும் தோல்வியிலேயே முடிந்ததது. இந்த காதல் பிரிவுக்கு முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு நடித்துவருவதுதான் என்று கூறப்பட்டது. மேலும் ஹன்சிகாவின் தாயார் ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹன்சிகாவை சிம்புவுடன் அதிக நேரம் இருக்கவிடாமல் செய்ய முயன்ற அவரது அம்மா் அதில் வெற்றியும் பெற்றார்.
கடந்த பிப்14 அன்று காதலர் தினத்தன்று நான் சிங்கிள் என ஸ்டேடஸ் போட்டு பிரிவை உறுதியாக்கினார் ஹன்சிகா.
அதன்பின்னரும் ஹன்சிகாவை சமாதான படுத்த முயன்று அதில் தோல்வியையே தலுவினார் சிம்பு. பொறுத்துபார்த்த அவர்  காதல் முறிவை அதிகாரபூர்வமாக அறிவித்தாலும், ஹன்சிகா எதுவும் பேசாமல் இருந்தார். இ்ந்நிலையில் அவர் தற்போது இது குறித்து முதன்முறையாக பதிலளித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறிய ஹன்சிகா கூறும்போது, சிம்புவை விட்டு நான் விலகி விட்டேன். அவரைப் பற்றி என்னிடம் இனிமேல் எதுவும் கேட்க வேண்டாம். நான் பேசவும் மாட்டேன். இப்போது என் கவனமெல்லாம் நடிப்பில் மட்டுமே இருக்கிறது என்று கூறினார்.