புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

புலிகளின் ஆவணமே புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: முன்னாள் படையதிகாரி
இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
போரின் பின்னர் 39 பக்கங்கள் அடங்கிய இந்த ஆவணம் விடுதலைப் புலிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே சுமார் 400 அமைப்புக்களும் தனி ஆட்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தது.
எனினும் இது குறித்து சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை தடை செல்லுடியற்றதாகவே இருக்கும் என்று சட்டஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த அமைப்புக்கள் மற்றும் தனிஆட்கள் தொடர்பில் கண்காணிப்பு பணிகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக இலங்கையின் இளைப்பாறிய தேசிய புலனாய்வுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்
இவரின் கருத்துப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தர் குமரன் பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், பிரதியமைச்சர் கருணா என்ற முரளிதரன், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் போன்றோர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்த தடைக்கு எதிராக இலங்கையின் நீதிமன்றத்தில் எவரும் வழக்கு தாக்கல் செய்யமுடியும்.  அத்துடன் எதிர்காலத்தில் இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக அமைப்புக்களிடம் இருந்து நிதிகளை பெற்றுக்கொள்ளலாம். எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதியை பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு நிதி பெற்றுக்கொள்ளப்படுமானால் எவரும் கைது செய்யப்படுவர் என்று ஹெந்தவிதாரண குறிப்பிட்டுள்ளார்.

ad

ad