புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

இலங்கைக்கு எதிராக விரைவில் விசாரணைகள் vவீடியோ கொன்பிரென்ஸ் மூலம் நடக்கலாம் .
இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்
நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.
வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணைக்குழுவினர் விசாரணை நடாத்தி படையினரையும் அரசியல்வாதிகளையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப்படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad