புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2002 ம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 
 
இந்நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கென விசேட நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இவ் விசேட குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குழு தனது விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 27வது அமர்வின்போது இந்த குழு வாய்மொழி மூலமான அறிக்கையை முன்வைக்கவுள்ளது. 
 
இதன் பின்னதாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருந்நது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad