புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
காரணங்களினால் இலங்கையை கூடுதலாக ஆதரிக்கவில்லையென பாஜக குற்றம் சாட்டியிருப்பதன் பொருள் என்ன என்பது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு காங்கிரஸ் அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போர் முடிவடைந்த பின்பும் தமிழ் மக்களை பாதுகாப்பாக அவர்களது பிரதேசங்களில் வசிப்பதற்கான வசதிகளை இந்திய ஆளும் காங்கிரஸ் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய இந்திய அரசு, பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தமை தவறு என நிர்மலா சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும் பிரதமர் மன்மோகன் சிங் அனைத்து தரப்பையும் குழப்பத்திற்கு உட்படுத்தி, கடைசி நேரத்தில் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தமையினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை எனவும் பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad