புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

24-ந் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 40 தொகுதிகளில் 1,359 பேர் மனு தாக்கல்

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி மே மாதம் 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே, காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆகிய இரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை 758 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
முடிந்தது
நேற்று பிற்பகல் 3 மணியுடன் மனு தாக்கல் முடிந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 560 பேர் மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,318 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 1,198 பேர் ஆண்கள். 118 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள் ஆவர்.
புதுச்சேரியில் 41 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பாராளுமன்ற தொகுதி வாரியாக மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
வட சென்னை
1. வட சென்னை - 53
2. மத்திய சென்னை - 43
3. தென் சென்னை - 46
4. திருவள்ளூர் - 25
5. காஞ்சீபுரம் - 24
6. ஸ்ரீபெரும்புதூர் - 38
7. தஞ்சை - 30
8. நாகை - 16
9. மயிலாடுதுறை - 28
10. ஈரோடு - 27
சேலம்
11. விழுப்புரம் - 26
12. கடலூர் - 26
13. சிதம்பரம் - 31
14. கள்ளக்குறிச்சி - 33
15. சேலம் - 34
16. நாமக்கல் - 35
17. தர்மபுரி - 29
18. கிருஷ்ணகிரி - 28
19. கோவை - 34
20. பொள்ளாச்சி - 29
21. நீலகிரி - 16
22. திருப்பூர் - 32
23. வேலூர் - 38
24. அரக்கோணம் - 52
25. ஆரணி - 24
26. திருவண்ணாமலை -51
திருச்சியில் 37 பேர்
27. திருச்சி - 37
28. பெரம்பலூர் - 30
29. கரூர் - 32
30. மதுரை - 46
31. சிவகங்கை - 37
32. விருதுநகர் - 37
33. ராமநாதபுரம் - 59
34. திண்டுக்கல் - 25
35. தேனி - 44
36. நெல்லை - 37
37. தென்காசி - 22
38 தூத்துக்குடி - 30
39. கன்னியாகுமரி - 34
40. புதுச்சேரி - 41
நாளை பரிசீலனை
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அப்போது, தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 9-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும்.
ஓட்டு எண்ணிக்கை
அதன்பிறகு 24-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ad

ad