சனி, ஏப்ரல் 05, 2014

ஆசியாவின் சிறந்த வீரர்க்கான விருது தோனிக்கு

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
 
2014 ஆம் ஆண்டில் தமது துறைகளில் சிறந்து விளங்குகின்றவர்களுக்கான விருது வழங்கும் விழா பிரித்தானியாவில் நடைபெற்றது.
 
இதன்போதே பங்களாதேஷுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணித்தலைவருக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராம்பிரகாஷ் இந்த விருதை வழங்கியுள்ளார்.
 
இந்த விருது கிடைத்தமை முன்னிட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ள தோனி , அதனை தமது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.