புதன், ஏப்ரல் 09, 2014

கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?சீமான் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை


‘தெனாலிராமன்’ பட சர்ச்சையில் நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை
நிறுவனர் தலைவர் ஆர்.பாலகுருசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில், ‘’வடிவேலு ஒன்றும் எங்களின் எதிரி அல்ல. எங்கள் உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிபடுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக படம் இல்லாமல் வடிவேலு இருந்தபோது சீமான் ஏன் அவரை வைத்து படம் எடுக்கவில்லை.
இன்று ‘தெனாலிராமன்’ படத்தை எதிர்ப்பது தெலுங்கு அமைப்புகள் என்றதும் சீமான் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார். இன்று மட்டும் வடிவேலு தமிழன் ஆகிவிட்டார். கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கும், நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துக்கும் பிரச்சினை வந்தபோது, சீமான் எங்கே சென்றிருந்தார். கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?.

எங்கள் உணர்வுகளை ஒடுக்கும் வகையில் மிரட்டல்கள் விடுக்கும் தொனியில் பேசி வந்தால் உங்கள் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம். நாங்கள் எதையும் சந்திக்க தயார். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஜனநாயக வழியில் போராடுவோம். சீமானுக்கு இதன்மூலம் எங்களுடைய கண்டனத்தையும் தெரி வித்துக்கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.