புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014


யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை
வெளியிட்டுள்ளன. குறிப்பாக குறித்த தொழில்நுட்பக் கல்லூரி அதிபரே மாணவர்களை பொறியினுள் தள்ளிவிடும் கைங்கரியத்தில் ஈடுபடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு கல்லூரி தரப்புகள் தெரிவித்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி ந.யோகராஜனின் அனுசரணையுடனேயே படையினர் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை சீருடையில் அங்கு சென்ற படை அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இக் கலந்துரையாடலில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று யோகராஜன் நிர்ப்பந்தித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய படை அதிகாரி இது படையினருக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்று கூறியதுடன் படைதரப்பின் அங்கமான விரிவுரையாளர்கள், சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் வெற்றிடங்களிற்கே இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் தாங்கள் எந்தத் துறைகளில் கல்வி கற்கின்றார்களோ அந்த துறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இணைந்து கொள்பவர்களுக்கு படைப்பயிற்சி இல்லையெனவும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வேதனம், உடைகள், தங்குமிடம், உணவு இலவசம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே வேலை என்று பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருந்தன. கற்கை நெறியைப் பூர்த்தி செய்யாத மாணவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்று படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

வன்னியில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் படைக்கு அல்ல, ஏனைய வேலைகளிற்கே என்று கூறியே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதே பாணியிலேயே கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதால் அங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த கல்லூரியின் பணிப்பாளர் யோகராஜன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். அத்துடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியில் அவர் இணைந்து யாழில் போட்டியுமிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் அனைத்து சிங்கள அதிகாரிகள், மற்றும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்து மாப்பிள்ளைகள் ஆக்குவதில் யோகராஜன் முன்னின்று உழைத்தவராவார். விருந்தினர்களிற்கு தலைப்பாகை அணிவித்து மாப்பிள்ளைக் கோலமாக அலங்கரித்ததன் மூலம் மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த யோகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad