புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014




சேலத்தில் போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும்போது ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–அரைநிர்வாணமாக
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்
டலாம்பட்டி நோக்கி செல்லும் பெங்களூர் பைபாஸ் ரோட்டில் எடைமேடை(வேபிரிட்ஜ்) ஒன்று உள்ளது. இந்த எடைமேடைக்கு பின்புறமாக ராமையன் சுடுகாடு என்ற பகுதியில் பாழடைந்த ஷெட் ஒன்று உள்ளது.
இந்த ஷெட்டிற்கு வெளியே ஜட்டி மட்டும் அணிந்த நிலையில் அரைநிர்வாணமாக,  காலை ஆண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கியதற்கான ரத்தகாயமும், கட்டையால் தாக்கியதில் உடல், கால் முழுமையும் வீக்கம் எடுத்த நிலையில் உடல் கிடந்தது. மேலும் சிறிய ஷெட்டிற்குள்ளும் ரத்தக்கறை படிந்திருந்தது.
இதுகுறித்து சேலம் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.
போக்குவரத்து போலீஸ் ஏட்டு
விசாரணையில், கொலை செய்யப்பட்டு அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவர், சேலம் தெற்கு சரக போக்குவரத்து போலீஸ் பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் ராஜூ(வயது41) என்பதும், சேலம் அன்னதானப்பட்டி தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
கொலையுண்ட ராஜீவுக்கு புஷ்பா(35) என்ற மனைவியும், 16 வயதில் பிளஸ்–2 படிக்கும் பவித்ரா என்ற மகளும், 14 வயதில் 10–ம் வகுப்பு படிக்கும் நவீன் என்ற மகனும் உள்ளனர். நேற்று நவீனுக்கு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து புஷ்பா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, ஓலைப்பட்டி அருகே உள்ள கங்காணிகாட்டுவளவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
வீட்டுக்கு செல்வதில்லை
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக போலீஸ் ஏட்டு ராஜூ சரியாக வீட்டிற்கு செல்வதில்லையாம். அதேவேளையில் தனது மகன், மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவர்களை பார்ப்பதை ராஜூ வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இதுபோல ராஜூ தனது மகன், மகளை பள்ளியில் சென்று பார்த்துள்ளார்.
இதையறிந்த அவரது மனைவி புஷ்பா, கணவர் ராஜூவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘இனி பள்ளிக்கு சென்று குழந்தைகளை சந்திக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ளக்கூடாது‘‘ என்று எச்சரித்துள்ளார். போலீஸ் ஏட்டு ராஜூவுக்கு சொந்த ஊர், ஓமலூர் அருகே உள்ள செங்காட்டு பிரிவு ரோடு அருகே உள்ள சுக்கம்பட்டி ஆகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் சேலம் தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.
உல்லாசம் அனுபவிக்க வந்தவர்
சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, போக்குவரத்து உதவி கமிஷனர் ஜான்சன், தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று போலீஸ் ஏட்டு ராஜூவின் உடலை பார்வையிட்டனர். ஜட்டி அணிந்த நிலையில் கிடந்த ராஜூவின் உடலுக்கு 2 மீட்டருக்கு அப்பால், அவர் அணிந்திருந்த பேண்ட், சட்டை கழற்றி வைக்கப் பட்டிருந்தது. அருகில் அவர் அணிந்திருந்த வாட்சும், செருப்பும் கிடந்தது. ஆனால், செல்போனை காணவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அது ‘சுவிட்ச் ஆப்‘ செய்து வைக்கப்பட்டது தெரிந்தது.
மேலும் பாழடைந்த சிறிய ஷெட்டிற்குள் ரத்தக்கறை மட்டுமல்லாது மதுபாட்டில்களும் கிடந்தன. எனவே, போலீஸ் ஏட்டு ராஜூ, நேற்று  இரவு உல்லாசம் அனுபவிக்க வேண்டி இளம்பெண்ணை அந்த பாழடைந்த ஷெட்டிற்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதற்கு தயாராக பேண்ட், சட்டையை கழற்றி வைத்திருக்கலாம் என்றும், உல்லாசம் அனுபவிக்கும் வேளையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அல்லது அவர் வேறு நண்பர்கள் சிலருடன் உல்லாசம் அனுபவிக்க வந்திருக்கலாம் என்றும், அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில், ராஜூ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
ஒருவர் சிக்கினார்
இந்த கொலை தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக எடைமேடை அலுவலகத்தில் வேலைபார்க்கும், சேலம் பொடாரங்காட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ராஜூவின் மாயமான செல்போன் எண்களில் யார்? யார்? தொடர்பு கொண்டு பேசினார்கள் என்ற பட்டியலையும் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையுண்ட இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் ஏதும் சிக்குகிறதா? எனவும் ஆய்வு நடத்தினர்.
கொலையுண்ட போலீஸ் ஏட்டு ராஜூ, கடந்த 1997–ம் ஆண்டு காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தவர். கடந்த மாதம் 25–ந் தேதி முதல் நேற்று முன்தினம் 9–ந் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். விடுமுறை முடிந்து நேற்று 10–ந் தேதி மீண்டும் அவர் பணியில் சேருவதாக இருந்தது. ஆனால், அதற்குள் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad