புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

பிரான்ஸ் நாட்டின் வீதியருகில் பாரிய மனித முகாம்! தமிழர்களும் அவலத்தில்
பிரான்ஸ் நாட்டில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சில தமிழர்கள், மற்றும் பல வெளிநாட்டவர்கள் கலை என்னும் இடத்தில் சிறு குடிசைகளை அமைத்து தங்கியுள்ளார்கள். இவர்களின் வாழ்கை கதையைக் கேட்டால் நெஞ்சு பதைபதைக்கும். பிரான்ஸ் மட்டுமல்ல ஜேர்மனி, சுவிஸ் , இத்தாலி போன்ற பல நாடுகளில் இருந்து இவர்கள் பிரான்ஸுக்குள் வந்து கலை என்னும் இடத்தில் இருக்கிறார்கள்.

கலை என்னும் இடத்தில் பாரிய தடுப்பு முகாம் ஒன்றும் உள்ளது. அங்கே ஈழத் தமிழர்கள், சொமாலியர்கள், அரேபியர்கள், என்று பல இனத்தவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் பலர் அந்த முகாமின் முள் வேலிகளை தாண்டி(காயத்துக்கு உள்ளாகி) வெளியே தப்பிச் சென்று கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். கலையில் இருந்து பிரித்தானியா நோக்கிச் செல்லும் லாரிகளில் யாருக்கும் தெரியாமல் ஏறுவதே இவர்கள் நோக்கமாகவும் உள்ளது.

இதனைச் செய்யும்போது அவர்களின் சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள். ஆனால் எப்படி என்றாலும் பிரித்தானியாவுக்குள் வந்துவிடவேண்டும் என்பதே இவர்களின் முழு நோக்கமாக உள்ளது. கடும் குளிர், மழை காற்று எதனையும் பொருட்படுத்தாமல் இவர்கள் வாழ்ந்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைப் பார்த்த பல பிரெஞ்சுக்காரர்கள், குறித்த இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உணவுகளை கூட வழங்கியுள்ளார்கள். தடுப்பு முகாமை விட்டு தப்பிச் சென்றவர்களை பிரான்ஸ் பொலிசார் பெரிதாக மேற்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆட்கள் எண்ணிக்கை குறைந்தால் போதும் என்று அவர்கள் இருந்துவிடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இப்படியான குடிசைகளில் பல தமிழர்களும் வாழ்ந்து வருவதாக மேலும் அறியப்படுகிறது. சரியான சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள், அங்கே வரும் லாரிகளில் ஏறி, பிரித்தானியாவுக்குள் நுளைய முற்படுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்களின் குடிசைகள், நெடுஞ்சாலைக்கு அருகாமையில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இங்கே நாம் பிரசுரித்துள்ள படத்தில், நெடுஞ்சாலையில் பிரித்தானியா நோக்கிச் செல்லும் லாரி ஒன்றில் வேற்று இனத்தவர்கள் ஏற முற்படும் காட்சிகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.



ad

ad