புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா ஏப்ரல் 28ல் ஆஜராக உத்தரவு
 வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று
அவர்கள் கூறியதையடுத்து, 28ம் தேதி சசிகலா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 1991-92, 1992-93-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
சமீபத்தில் ஜெயலலிதா இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்நம் கண்டிப்பாக இந்த வழக்கை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும் என்றும், மேலும் 4 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்கவும் கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி ஏப்ரல் 6ம் தேதி அவர்கள் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர்கள் அன்று ஆஜராகததால் அதற்கு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி அவர்களை 10ம் தேதி கண்டிப் பாக ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர்கள் இன்றும் ஆஜராகாமல் வழக்கை 3 வாரத்திற்கு தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்ததையடுத்து, நீதிபதி தஷ்ணாமூர்த்தி 28ம் தேதி கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் வருமானவரி துறை தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் கண்டிப்பாக 28ல் ஆஜராவதாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ad

ad