புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற 3வது கட்ட தேர்தலில்  டெல்லியில் 64 சதவீதமும், கேரளாவில் 74  சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான 3 ஆம் கட்ட தேர்தல் இன்று, 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

கேரளாவிலுள்ள 20 தொகுதிகளுக்கும், டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியானாவிலுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது.

மேலும், பீகாரில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபர், சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளிலும் என மொத்தம் 91 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதேபோல், ஒடிசாவில் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவிலுள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

டெல்லியில் 60 சதவீத வாக்குகள் பதிவு

டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட அரசியல் நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

கேரளாவில் 72 சதவீத வாக்குகள் பதிவு

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் கிராமங்கள் மற்றும் மாநிலத்தின் உள்புற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் காலையிலேயே நீண்ட வரிசை காணப்பட்டது.

இது போல திருவனந்தபுரம், கொல்லம் தொகுதிகளிலும் காலையிலேயே வாக்கு பதிவு வேகமாக நடந்தது. சாலக்குடி, காசர்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்தனர்.  மாநிலத்தின் தெற்கு பகுதியில் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தபோது, சராசரியாக 74 சதவீதம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற மாநில வாக்கு விவரங்கள்
இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள 10 தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 66.29 சதவீதமும், மகாராஷ்டிராவிலுள்ள 10 தொகுதிகளிலும் சராசரியாக 54.13 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சராசரியாக 55.98 சதவீதமும்,  ஒடிசாவிலுள்ள 10 தொகுதிகளிலும் சராசரியாக 67 சதவீதமும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad