புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

ஜெயலலிதாவாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா?: 
வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள் வதாக இருந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கூட்டம் கூடி வெகுநேரம் நின்றால்
, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணினார் வைகோ, எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று கூறி, ஒரு நிமிடம் பேசி முடித்து அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது, அங்கிருந்த தொண்டர்கள், வைகோவிடம் நீங்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


அதைக் கேட்டு வைகோ தொண்டர்களை அமைதிப் படுத்திவிட்டு புறப்படத் தயாரானார். அப்போது அருகில் இருந்த போலீஸார், சிறிய சாலை நீங்கள் சாலை ஓரமாக வந்து பேசுங்கள் என்று கூறினார்கள்.
இதனால் ஆவேசமடைந்த வைகோ, ஜெயலலிதாவாக இருந்தால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா? எங்களிடம் இப்படிப் பேசக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு என்பது எங்களுக்கும் தெரியும். அதனால்தான் நான் புறப்படுகிறேன்... என்று கூறி விட்டுக் கிளம்பிச் சென்றார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad