புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014

டையினரின் அடாவடியை எதிர்த்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் 
வட்டமடு வயல் பிரதேசத்தில் விவசாயம்  செய்வதற்கு இராணுவத்தினர் தடைசெய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அக்கரைப்பற்று நகரில் இன்று
 காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
விவசாயிகள் தெரிவிகையில்:-
 
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு வயல் பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தோம் ஆனால் அண்மைக் காலமாக பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது 
 
இப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு வனபரிபாலன சபைக்கு சொந்தமான பகுதி என வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டது. பின்னர் வனபரிபாலன சபை அமைச்சர் சுனில் பிரேமஜெயந்த இந்த பகுதியில் விவசாயம் செய்யமுடியுமென கடந்த வருடம் கடிதம் வழங்கியதையடுத்து அந்த பகுதியில் விவசாயம் செய்துவந்தோம்.
 
இந் நிலையில் இவ் வருடம் மீண்டும் விவசாயம் செய்ய சென்றபோது பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி வட்டமடு விவசாய அமைப்பு- முறாணவெட்டி விவசாய அமைப்பு- கிறீன் பீல்ட் விவசாய அமைப்பு- வட்டமடு புதிய கண்ட விவசாய அமைப்பு- தோணிக்கல் தென் விவசாய அமைப்பு- கொக்குளவ விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தனர் .
 
50இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கும்வரை இச் சாகும்வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad