மொடல் அழகியை மணந்தார் ஷமி

கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமட் ஷமி.
ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனை சந்தித்த மொகமட் ஷமி அவரை திருமணம் செய்து கொண்டார்.
எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் யாரும் வரவில்லை.
இது பற்றி ஷமியின் தந்தை கூறுகையில் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை. காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை.
எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.